எம்.காம்., டேக்ஸ்சேஷன் படித்தால் வரிவிதிப்புதுறை நிபுணராகலாம்
எம்.காம்., டேக்ஸ்சேஷன் படித்தால் வரிவிதிப்புதுறை நிபுணராகலாம்
எம்.காம்., டேக்ஸ்சேஷன் படிப்பை முடித்தவர்களுக்கு உலகம் முழுவதும் பணி
வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. அவர்களுக்கான தேவைகள் எப்போதும்
குறைவதில்லை.
* இப்படிப்பு எப்படி?
வரிவிதிப்புகள்
தொடர்பான அனைத்து தலைப்புகள் மற்றும் பாடங்கள் மீது இப்படிப்பு கவனம்
செலுத்துகிறது. மேலும், இப்படிப்பில் வருமான வரி, விற்பனை வரி, வாட், சேவை
வரி, சொத்து வரி, வரி சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் போன்ற அனைத்துவித
வரிகளை பற்றிய விபரங்களும் இதில் அடங்கும். இந்த 2 வருட படிப்பு
வரிவிதிப்பு துறை பற்றிய நடைமுறை உண்மை அனுபவங்களை மாணவர்களுக்கு
வழங்குகிறது.
இப்படிப்பு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சமகால
வரிவிதிப்பு அம்சங்களை பற்றி அலசுகிறது. மேலும், வணிகத்தின் அடிப்படைகளோடு
பற்றியதோடு மட்டுமல்லாமல், அதன் மேம்பட்ட துறைகளான மேலாண்மை, அட்வான்ஸ்
அக்கவுண்டிங், பிசினஸ் என்வைரன்மென்ட், காஸ்ட் அனலிசிஸ் அன்ட் கன்ட்ரோல்,
கார்பரேட் லீகல் பிரேம் ஒர்க், அட்வான்ஸ் ஸ்டேடிஸ்டிகல் அனலிசிஸ்,
மேனேஜெரியல் எகனாமிக்ஸ், என்டர்பிரினியர்ஷிப் ஸ்கில் டெவலப்மென்ட், டைரக்ட்
அண்ட் இன்டைரக்ட் டேக்ஸ், சேல்ஸ் அண்ட் சர்வீஸ் டேக்ஸ் அகியவற்றின்
அம்சங்களையும் இப்படிப்பு விவரிக்கிறது.
* மாணவர் சேர்க்கை நடைமுறை :
இளநிலையில்
வணிகப்படிப்பு முடித்திருப்பது கட்டாயம். பொதுவாக இப்படிப்பில் சேர
விரும்பும் மாணவர்கள், தங்களின் இளநிலையில் குறைந்தது 45 சதவீதம் முதல் 50
சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.
பொதுவாக, மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும், சில
பல்கலைகள், நேர்முகத் தேர்வையும் நடத்துகின்றன.
* படிப்பின் நன்மைகள்:
மாணவர்கர்களுக்கான
பலவித வாய்ப்புகளை இப்படிப்பு ஏற்படுத்தி தருகிறது. இத்துறையில் ஆராய்ச்சி
மேற்கொள்ள விரும்புவோர், எம்.பில்., மற்றும் பி.எச்டி., படிப்புகளையும்
மேற்கொள்ளலாம். இத்துறை மிகவும் பரந்து விரிந்த ஒன்று என்பதால் ஒருவர்
தனக்கு பிடித்தமான ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
* வேலை, சம்பளம், வளர்ச்சி:
இப்படிப்பை
முடித்த பிறகு கஸ்டம்ஸ், ஸ்டேட் சேல்ஸ் டேக்ஸ் லா, இம்போர்ட் மற்றும்
எக்ஸ்போர்ட் ஃபேர்ம்ஸ், எக்சைஸ் டிபார்ட்மென்ட் ஆகியவற்றில் பணியாற்றலாம்.
கேபிஎம்ஜி, எர்ன்ட்ஸ் அண்ட் யங், பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ், டிலோய்ட்
போன்ற சட்ட மையங்கள் ஏறக்குறைய 60 சதவீதம் வரிவிதிப்பு நிபுணர்களை பணிக்கு
அமர்த்துகின்றன.
ஒரு பெரிய கன்சல்டிங் நிறுவனத்தில் டேக்ஸ்
மேனேஜ்மென்ட் மற்றும் திட்டமிடுதலில் பட்டம் பெற்ற ஒருவருக்கு
ஆரம்பநிலையிலேயே ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. அதே சமயம்
புதிதாக படித்து வெளிவருபவர்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை கிடைக்கிறது.
பொறுப்புக்கு
தகுந்தபடிதான் சம்பளம் இருக்கும் என்றாலும் சில நாடுகளில் சில நிறுவனங்கள்
ஆரம்ப நிலையிலேயே ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை தருகின்றன. இத்துறை சார்ந்த
ஒரு நடுநிலையிலான நிபுணருக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம்
வரை கிடைக்கிறது.
நடுநிலையிலான நிபுணர் குறைந்த பட்சம் 4 ஆண்டுகள்
வரையான அனுபவமும், ஒரு சீனியர் நிபுணர் குறைந்த பட்சம் 12 ஆண்டுகள்
வரையிலான அனுபவமும் பெற்றிருப்பார். சில பெரிய நிறுவனங்கள் சர்வதேச
டெபுடேஷன் வாய்ப்புகள் மற்றும் பல்வேறான துறைகளை பற்றி அறிந்து கொள்ளும்
வாய்ப்புகள் ஆகியவற்றை அளிக்கின்றன.
* வரி வகைப்பாடுகள்:
வரி
நிபுணர்களுக்கு இரண்டு விதமான தேவைப்பாடுகள் உள்ளன. உள்ளூர் தேவைகள்
மற்றும் சர்வதேச தேவைகள் என்பவையே அவை. ஒரு நல்ல வரி நிபுணருக்கான
பற்றாக்குறை மற்றும் உலகெங்கிலும் தற்போது அதிகரித்து வரும் வரி நடைமுறை
சிக்கல்கள் போன்றவை இத்துறை நிபுணர்களின் சம்பளத்தை பெருமளவு அதிகரிக்க
காரணமாய் அமைந்துள்ளன.
சமீப காலங்களில் இவர்களுக்கான சம்பளம்
மிகவும் அதிகரித்து வருகிறது. நேரடி வரி நிபுணர்களை காட்டிலும், மறைமுக வரி
நிபுணர்களுக்கு தேவை அதிகளவில் உள்ளது. ஆனால், நிபுணர்கள் குறைவான
அளவிலேயே உள்ளனர். கஸ்டம்ஸ் அண்ட் எக்சைஸ் போன்ற துறைகளில் இந்த மறைமுக வரி
நிபுணர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
* நிபுணர்களுக்கான தேவை:
கடந்த
4 ஆண்டுகளாக சர்வதேச சட்டங்களில் பரிச்சயம் பெற்ற வரி நிபுணர்களுக்கான
தேவை அதிகரித்து வருகிறது. தேவைக்கும், நிபுணர்களுக்கும் இடையிலான
வித்தியாசம் அதிகரித்து கொண்டே வருவதால் இப்படிப்பை மேற்கொள்ளும்
மாணவர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதே
சமயத்தில் வெறும் பட்டம் வாங்கினால் மட்டும் போதாது. இத்துறையில் சிறந்து
விளங்க தேவையான அனைத்து திறன்களையும் சிறப்பான முறையில் வளர்த்து கொள்வது
முக்கியம்.
* தொடர்புடைய படிப்புகள்:
மாஸ்டர்
ஆப் காமர்ஸ் - அட்வான்ஸ் டேக்ஸ்சேஷன் அண்டு அக்கவுண்டிங், காஸ்ட்
அக்கவுண்டிங் அண்டு டேக்ஸ்சேஷன், அக்கவுண்ட்ஸ் அண்டு டேக்ஸ்சேஷன்.
* தொடர்பான பாடங்கள்:
அட்வான்ஸ்
அக்கவுண்டிங், காஸ்ட் அனலைசிஸ் அண்டு கன்ட்ரோல், கார்பரேட் லீகல் ஃபிரேம்
ஒர்க், அட்வான்ஸ் ஸ்டேடிஸ்டிகல் அனலைசிஸ், மேனேஜிரியல் எகனாமிக்ஸ்,
அக்கவுன்டிங் பார் மேனேஜிரியல் டிசிசன்ஸ், டைரக்ட் டேக்ஸ், இன்டைரக்ட்
டேக்ஸ், சேல்ஸ் அண்டு சர்வீஸ் டேக்ஸ்.
* இப்படிப்பை வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்கள்:
ஏஐஎஸ்இசிடி
யுனிவர்சிட்டி - போபால், சிவாஜி யுனிவர்சிட்டி - குவாலியர், ஐஐஎஸ்
யுனிவர்சிட்டி - ஜெய்ப்பூர், எம்எஸ் யுனிவர்சிட்டி - பரோடா.
No comments:
Post a Comment