Thursday, 1 January 2015

கல்பாக்கத்தில் காலிப் பணியிடங்கள்

 
 
கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிறுவனம் இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய உரிய தகுதி கொண்டோர் டிசம்பர் 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

காலிப் பணியிடங்கள்: 50 

இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், இயந்திரப் பொறியியல் உள்ளிட்ட 14 பிரிவுகளில் இந்த ஆராய்ச்சியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பி.இ., பி.டெக், பி.எஸ்சி. பொறியியல் போன்ற இளநிலைப் பட்டமோ முதுநிலைப் பட்டமோ பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய காலிப் பணியிடத்துக்குத் தேவையான பட்டம் பெற்றிருப்பவர்கள் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் அவசியம்.

வயது: 2014 ஜூலை 1 அன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் சலுகை உண்டு. 

சம்பளம்: ரூ.16,000 

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப் பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதனடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். சென்னை, கொல்கத்தா, புவனேஷ்வர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
சிறப்புத் தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் நேரிடையாக நேர்காணலில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். நேர்காணல் சென்னையிலும், கல்பாக்கத்திலும் நடத்தப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.igcar.gov.in/ என்னும் இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தையும் நுழைவு அனுமதிச் சீட்டையும் பதிவிறக்கி, பூர்த்திசெய்து அனுப்ப வேண்டும். 

அனுப்ப வேண்டிய முகவரி: The Assistant Administrative Officer [R], Recruitment Section, Indira Gandhi Centre for Atomic Research, Kancheepuram District, Kalpakkam – 603102, Tamil Nadu. 

விண்ணப்பத்தை அனுப்பும்போது அஞ்சல் உறையின் மீது JRF, Advt. No. 3/2014 என்பதையும் என்ன பிரிவுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். 

கூடுதல் விவரங்களுக்கு: http://www.igcar.gov.in/recruitment/Advt3_JRF2014.pdf
முக்கிய நாள்கள்:விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: 12.12.2014
எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் பட்டியல் வெளியிடப்படும் நாள்: 26.12.2014 

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 11.01.2015
 
நேர்காணல் நடைபெற உள்ள நாள்: 02.02.2015 - 06.02.2015

 பணியில் சேர வேண்டிய நாள்: 23.02.2015

No comments:

Post a Comment